திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 21 May 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்


திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் தேர், பறவை காவடி ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர்



தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம்  தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.



அதனை தொடர்ந்து தினமும் சாமி பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவார்.



வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக்கடனாக பால்குடம் மற்றும் இளநீர் காவடி, தேர் பறவை காவடி, அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆறு சிந்தாமணி, அவனியாபுரம், வில்லாபுரம், போன்ற பகுதியில் இருந்து பால்குடம் எடுத்து குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad