மதுரை பாலமேட்டில் அரசு புறம்போக்கில் இருப்பதாக கூறி பாஜக ஒன்றிய துணைத் தலைவரின் டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை அப்புறப்படுத்திய பேரூராட்சி அதிகாரிகள் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 21 May 2024

மதுரை பாலமேட்டில் அரசு புறம்போக்கில் இருப்பதாக கூறி பாஜக ஒன்றிய துணைத் தலைவரின் டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை அப்புறப்படுத்திய பேரூராட்சி அதிகாரிகள்


மதுரை பாலமேட்டில் அரசு புறம்போக்கில் இருப்பதாக கூறி பாஜக ஒன்றிய துணைத் தலைவரின் டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை அப்புறப்படுத்திய பேரூராட்சி அதிகாரிகள்



தேர்தல் முன்பகை காரணமாக திமுகவினரின் தூண்டுதலால் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அதிகாரிகள் மீது பாஜக நிர்வாகி புகார் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை



மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்றில் கிழக்குப் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில்  கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை  வைத்திருப்பவர் கண்ணன்   பாஜகவின் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய துணை தலைவராக பதவி வகித்து வருகிறார் இவர் தனது மனைவி மற்றும் மகன் மகள் ஆகியோருடன் அருகில் குடியிருந்து வருகிறார்


இந்த நிலையில் நேற்று இவர்  குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது கடைக்கு வந்த பாலமேடு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சிலர் அரசு புறம்போக்கு இடத்தில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடை வைத்திருப்பதாக கூறி  சுமார் 5 லட்சம் மதிப்பிலான கடையை அப்புறப்படுத்தி சென்று இருக்கின்றார் அப்போது அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் வெளியூர் சென்றிருந்தவர் திரும்பி வந்து பார்த்தபோது இவரது டீக்கடை மற்றும் பெட்டி கடை தரை மட்டமாகி இருந்தது கண்டு வேதனை அடைந்தார்


இது குறித்து இவர் கூறும் போது நான் கடந்த 15 ஆண்டுகளாக இந்த இடத்தில் டீக்கடை மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன் பாஜகவின் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவராக இருந்து வருகிறேன் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தேன் அன்றிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்குள்ள திமுகவினர் எனக்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வருகின்றனர் குறிப்பாக நான் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் எனது சமுதாயத்தில் உள்ள சிலரை தூண்டிவிட்டு எனது கடைக்கு  வரக்கூடாது என்றும் அப்படி வருபவர்களை மிரட்டி வருவதாகவும் உள்ளனர் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலமேடு பேரூராட்சி சார்பில் அதிகாரிகள் என்னிடம் வந்து நீ அரசு புறம்போக்கில் கடை வைத்திருக்கிறாய் 15 நாட்களுக்குள் கடையை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியிருந்தனர் இது குறித்து எனது குடும்பத்திடம் பேசி முடிவு சொல்வதாக தெரிவித்திருந்த நிலையில் நோட்டீஸ் வழங்கிய மறுநாளே ஆளுங்கட்சியான திமுகவினரின் தூண்டுதலால் பேரூராட்சி அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களை கொண்டு எனது டீக்கடை மற்றும் பெட்டிக்கடையை நான் இல்லாத நேரம் பார்த்து அப்புறப்படுத்தி சென்றிருக்கின்றனர் இது குறித்து  பேரூராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு பயனும் இல்லை
திடீரென எனது கடையை அப்புறப்படுத்தியதால் எனது வாழ்வாதாரம் இழந்து குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது எனது கடையின் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும் மேலும் கடைக்குள் இருந்த அனைத்து பொருள்களையும் வெளியில் எடுக்க முடியாமல் இடிந்த நிலையில் உள்ளே அனைத்தும் சேதாரம் ஆகிவிட்டது


மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு எனக்கு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும்  கடை வைப்பதற்கு மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad