மானாமதுரையில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதல் பரிசான வெள்ளி மோதிரம் வென்ற மாணவர்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 21 May 2024

மானாமதுரையில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதல் பரிசான வெள்ளி மோதிரம் வென்ற மாணவர்கள்.

 


மானாமதுரையில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் முதல் பரிசான வெள்ளி மோதிரம் வென்ற மாணவர்கள். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பாரம்பரிய சிலம்ப பயிற்சி குழுவான வீர விதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை சார்பாக மே மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மானாமதுரை ஒவெசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையிலான வட்டார அளவில் சிலம்ப போட்டிகள் மாஸ்டர் கே. பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 130 வீரர்கள் பங்கேற்றனர். இச்சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வென்ற சிலம்ப வீரர்களுக்கு தலா ஐந்து நபர்களுக்கு முதல் பரிசும், தலா ஐந்து நபர்களுக்கு இரண்டாம் பரிசும், தலா 5 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகள் என மொத்தம் 15 பரிசுகள் வழங்கப்பட்டது. 



மேலும் முதல் பரிசான வெள்ளி மோதிரத்தை நிகாஷ், ஸ்ரீ ரிசாந்த், கபிலன், பேரரசு, மதன்குமார் ஆகியோர் வென்றனர். புகழ்ராஜ், ஷமீரா, சந்தோஷ் குமார், அபிமன்யு, தேவனேஸ்வரன் ஆகியோர் இரண்டாம் பரிசான நாற்காலியை வென்றனர். ஆகாஷ், ஹரிதர்ஷினி, ரவிக்குமார், அகிலேஸ்வரன், தேஜாஸ்ரீ ஆகியோர் மூன்றாம் பரிசான நாற்காலியை தட்டிச் சென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு வீர விதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை தலைவர் மாஸ்டர் கலைவளர்மணி டாக்டர் கே. பெருமாள் அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad