சுந்தர மூர்த்தி கொத்தனார் வேலை செய்வதால் காலை சென்று இரவு வருவதாக கூறப்படுகிறது, மேலும் இவர்களது வீடு ஊருக்கு வெளியே தள்ளி உள்ளது. இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மற்றொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது, இது குறித்து சுந்தர மூர்த்திக்கும் மகேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதலை கைவிடும்படி சுந்தரமூர்த்தி கூறியதை மனைவி கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடை நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் சுந்தரமூர்த்தி மனைவி மகேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து பெருங்குடி போலீஸார் பின்னர் மகேஸ்வரியை மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். கள்ளக்காதல் சம்பவத்தால் கணவனே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பரபரப்பாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment