அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தேமுதிக தீவிரமாக வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 4 April 2024

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தேமுதிக தீவிரமாக வாக்கு சேகரிப்பு.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து அதிமுகவினர் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட கிராமங்கள் கப்பலூர் சொக்கநாதன் பட்டி ஆகிய பகுதிகளில் முரசு சின்னத்திற்காக வாக்குகள் சேகரித்தனர். 

இதில் திருமங்கலம் தேமுதிக மாவட்ட செயலாளர் கணபதி அதிமுக ஒன்றிய செயலாளர், அன்பழகன், கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் உச்சப்பட்டி செல்வம், சுந்தர், உரப்பனூர் சுமதி சுவாமிநாதன், வழக்கறிஞர் பிரிவு சிங்கராஜ் பாண்டியன், முத்துராஜ், வெங்கடேஷ், சிவசக்தி, காசி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad