மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சிலைமான் அருகே தேர்தல் பறக்கும் படை C டீம், மாநில தணிக்கைத்துறை அலுவலர் தேன் மாரிகனி தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் சிலைமான் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முகம்மது ஹனிபா என்பவரின் மகன் அப்துல் பத்தாஹ் (வயது 50) என்பவர் சிலைமான் அருகே தாஜ் பிரிக்ஸ் கோட்ஸ் என்ற பெயரில் செங்கல் தயாரித்து வருகிறார்.
காலை வீட்டிலிருந்து TN 64 y 50 51 தன்னுடைய பிரிஸா காரில் ரூபாய் 78 ஆயிரத்து 500 பணம் எடுத்து சென்றார். வாகன சோதனையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு காண்பிக்க வேண்டும் என்ற விதிமுறையில் ரூபாய் 78,500 க்கு அலுவலர்கள் கணக்கு கேட்டபோது அப்துல் பத்தாஹ் பதிலளிக்காததால் . சோதனையில் ஈடுபட்ட அலுவலர் தேன்மாரிக்கனி குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து திருப்பரங்குன்ற வட்டாச்சியரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment