குடி போதை குடும்பத் தகராறு செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 20 March 2024

குடி போதை குடும்பத் தகராறு செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு.


மதுரை ஆணையூரில் உள்ள செல்போன் டவரில் ஏறி ஆண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக கூடல்புதூர் போலீசாருக்கு இன்று மாலை தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கூடல் புதூர் போலீசார் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு துறையினர் தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு விசாரித்த அதி அவர் ஆணையூர் டிஎன்எச்பி காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 48) எனத் தெரிந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் டவரின்  மீது ஏறி அளவுக்கு அதிகமாக மது அருந்திய பாண்டியராஜன் போதையில் மீது ஏறி தூங்கியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அவரை போலீசார் எச்சரித்து விடுவித்தன. 

No comments:

Post a Comment

Post Top Ad