திருப்பரங்குன்றம் அருகே திருவள்ளுவர் நகரை சேந்தவர் குமார் இவரது மகன் சரவணன் (வயது 35) இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் திருநகர் 5வது ஸ்டாப் பயில்வான் ஒயின் ஷாப் அருகே திருநகர் நெல்லையப்பர் புரத்தை சேர்ந்த ஜீவா மகன் ராஜ் (எ) கபம் (வயது 22).சேகர் மகன் ராஜ்குமார் (வயது 25). பாண்டியன் நகர் காசி மகன் விஸ்வா (வயது 20) இவரது சகோதரர் ஆனந்த பிரபு (வயது 22) மற்றும் பசுமலை மூலக்கரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்திக் கண்ணன் (வயது 18) ஆகியோர் சேர்ந்து சரவணனை பீர்பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி தப்பி ஓடினர்.
இதில் படுகாயமடைந்த சரவணனை அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிட்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி சரவணன் பலியானார். இது குறித்து சரவணனின் தந்தை குமார் அளித்த புகாரின் பேரில் திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர்.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி உத்திரவின் பேரில் திருநகர் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் தலைமறைவான குற்றவாளிகள் ராஜ், ராக்குமார், விஸ்வா காந்திக்கண்ணன், ஆனந்த பிரபு ஆகியோரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment