மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க.வில் புதிய மீனவர் அணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பரிந்துரைபடி மீனவ ரணிக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தெற்குமாவட்ட மீனவரணி அமைப்பாளராக ஆலங்குளம் செல்வம் நிய மிக்கப்பட்டுள்ளார்.
தலைவராக லெனின் பால சுப்பிரமணியன், துணைத் தலைவராக ராஜா, துணை அமைப்பாளர்களாக கனக வேல், முருகன், முத்துக் குமார், செல்லமுத்து, முத்து ராஜா (எ) பப்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீனவர் அணி அமைப்பாளர்கள் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
No comments:
Post a Comment