மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நாள்தோறும் உண்டாக்கக்கூடிய மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கு, தமிழக அரசின் நெஞ்சக நோய் மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான சிறப்பு பயிற்சிகளை, சுங்கச்சாவடி அருகிலேயே பிரமாண்ட பந்தல் அமைத்து, மன அழுத்தத்திலிருந்து விடுபட, உடல் உறுப்புக்கள் அனைத்தும் இயங்கும் வண்ணம், உடல், மனம் புத்துணர்ச்சி பெறும் வகையில், ஆடல், பாடலுடன் சிறப்பு பயிற்சியினை செய்து காண்பித்தனர்.
அதேபோன்று சுங்கச் சாவடி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் இப்பயிற்சியினை செய்து காண்பித்தனர், இதனால் சுங்கச்சாவடி வளாகமே விழாக்கோலம் பூண்டது போல் காட்சி பெற்றது.
No comments:
Post a Comment