மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் பெரிய ஆலங்குளம் அருகே தொட்டியபட்டி கிராமத்தில் சார்ஜ் கல்லூரி அருகே குடியிருந்து கூலி வேலை பார்த்து வருபவர் குமார். இவருக்கு தேவிகா (35) என்ற மனைவியும் சுகன்யா (15) தசரதன் (11) ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். தேவிகா விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார். தோட்டத்தில் வேலையை முடித்து துணி துவைத்து விட்டு வீடு திரும்புகையில் இடியுடன் கூடிய மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடற்கூறாய்வு பரிசோதனைக்காக தேவிகாவின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments:
Post a Comment