பள்ளி திறப்பதற்கு முன் ஆயத்த பணிகள் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆயத்த பணிகள் சார்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 6 June 2023

பள்ளி திறப்பதற்கு முன் ஆயத்த பணிகள் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆயத்த பணிகள் சார்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது.


மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா அவர்களின் தலைமையில் பள்ளி திறப்பதற்கு முன் ஆயத்த பணிகள் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆயத்த பணிகள் சார்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர்  சரவணன் அவர்கள்.மதுரை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கா.கார்த்திகா அவர்கள்  முன்னிலை வைத்தனர். 

கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை.மாவட்ட காவல்துறை.மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம். சத்துணவு திட்டம்,சுகாதாரப் பணிகள்.மாவட்ட வருவாய் துறை. மாவட்ட தொழிலாளர் நலத்துறை. வட்டாரப் போக்குவரத்து கழகம். மாவட்ட  குழந்தைகள் நல பாதுகாப்ப துறை.போன்ற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் உதவி மாவட்ட திட்ட அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் TNSF ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆட்சித் தலைவர் அவர்கள் துறை வாரியான அலுவலர்களிடம் பள்ளி திறப்பதற்கு முன் ஆயத்த பணிகள் சார்ந்து அனைத்து துறை அலுவலர்களிடம் பள்ளிகட்டிடம் உறுதி தன்மை, குடிநீர், கழிப்பிட வசதி, போக்குவரத்து அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு, ஜூலை மாத இரண்டாவது வாரத்தில் துவங்கப்பட உள்ள  நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து  துவக்க பள்ளிகளுக்கான காலை உணவு திட்டம் சார்ந்து ஆயத்த பணிகள் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, பள்ளி மாணவர்களுக்கான  இலவச பேருந்து வசதி, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தல், அரசு பள்ளியில் குழந்தைகள் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சார்ந்து பதாகைகள்  பள்ளியில் வைத்தல், வகுப்பறை புதிய கட்டிட வசதி, அனைத்தையும் விரிவான முறையில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பம்படியும், முக்கியமாக  குழந்தைகள் நலனுக்காக அனைவரும் ஒத்துழைக்கும் படி கேட்டுக்கொண்டார். 


கூடுதல் ஆட்சியர் பேசுவையில் குழந்தைகள் நலம் சார்ந்து பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் தகவல் தெரிவித்த உடனுக்குடன் மாவட்ட நிர்வாகம் அவற்றை சரி செய்ய முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை வலியுறுத்தி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad