மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் திருப்பரங்குன்றம் சாலையில் தனியார் பெருந்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் தனது நண்பனுடன் ஒருவழிப்பாதையில் சென்ற ஆண்டாள்புரத்தை சேர்ந்த ரோகன் (வயது 20 ) என்பவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து விபத்தில் சிக்கி படுகாயங்களோடு இருந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தொடர்ந்து சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment