திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு வழங்கவில்லை என மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுக்கு உடனடியாக 100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பொருட்செல்வியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.


அதனைத் தொடர்ந்து திருமங்கலம் ஆணையாளர் 100 நாள் வேலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் மறவன்குளம் ஊராட்சி மன்ற தலைவரையும் அழைத்து பேசி உடனடியாக 100 நாள் வேலை வழங்க உத்தரவிட்டார் எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இருந்த மறவன் குளம் கிராம பொதுமக்கள் ஆணையாளரின் உத்தரவின்படி தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டார்கள்.
No comments:
Post a Comment