இந்த நிலையில், வீட்டில், சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது, வெள்ளை சாதத்தில் பாதி உடைந்த பிளேடு துண்டு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று கடையில் வேலை பார்த்த ஊழியர் ஞானம் என்பவரிடம் கேட்ட போது அவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகமது உணவுப் பாதுகாப்புத்துறைக்கு கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த உணவை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், பணியாளர்களிடம் மருத்துவசான்று, தலையுறை அணியாமல் உணவுகளை சமைத்து வந்தது தெரிய வந்தது.


இதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்துள்ளது. மேலும், உணவுப்பாதுகாப்புத்துறை சுட்டிக்காட்டிய புகார்கள் குறித்து, உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மதுரையில் மதிய உணவிற்கு ஆர்டர் செய்த உணவில் பிளேடு துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment