இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மாநகராட்சி மண்டல அலுவலகம் 5-ன் அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் சில நாட்களுக்கு முன்பு மழை நீர் தேங்கியிருந்ததில் அரசு பேருந்து பயணிகளுடன் சிக்கியது. பின்னர், பேருந்ததில் இருந்து பயணிகளை இறக்கி விட்டு பின்னர் மீட்பு வாகனம் மூலம் பேருந்து தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டது.


இந்த நிலையில், ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள சுவற்றில் இடையே இருந்து தேங்கி இருக்கும் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து அருவியிலிருந்து நீர் வருவது போல் தண்ணீர் வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க செய்கிறது. மேலும், பக்கவாட்டு சுவர்களில் தொடர்ந்து கழிவு நீர் வழிந்து வருவதால் ரயில்வே சுரங்கப்பாதை நாளடைவில் பலவீனமடைந்து இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மதுரை மாநகராட்சி மண்டலம் 5 -அலுவலகம் அருகே இருக்கும் இந்த ரயில்வே சுரங்கப் பாதை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என, பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment