காரியாபட்டி அருள்மிகு திருவேட்டை அய்யனார் ஆலய குடமுழுக்கு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 21 May 2023

காரியாபட்டி அருள்மிகு திருவேட்டை அய்யனார் ஆலய குடமுழுக்கு.


காரியாபட்டி அருகே இலுப்பகுளம் ஸ்ரீ.திருவேட்டை அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கள்ளிக்குடி ஒன்றியம் ஸ்ரீ. திருவேட்டை அய்யனார் கோவில் ராஜகோபுரம் மற்றும் சேமங்குதிரை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  


20 ந் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கப்பட்டது. இரவு திரவியாகுதி, மஹா பூர்ணாஹுதி முடிந்தவுடன் தீபாதாரணை நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை முடிந்தவுடன் மண்டப சாந்தி, கோ. பூஜை ஜெப பாராயணம், திரவியாகுதி, ஸபர்ஸகுதிமகா பூர்ணாஹூதி நடைபெற்றது.


காலை 9 மணிக்கு புனிதநீர்கடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ராஜகோபுரம், மற்றும் சேமங்குதிரை தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, திருவேட்டை அய்யனார் மற்றும் பரவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad