நலத்திட்ட உதவிகள், புதிய உறுப்பினர் சேர்க்கைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:- 69 சதவீத இட ஒதுக்கீட்டை அம்மா பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி யார் பெற்று கொடுத்தார்கள். அது போன்று தான் இன்றைக்கு ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அம்மாவின் அரசாகும். திருமங்கலம் நகரம் என்றைக்குமே அதிமுகவின் கோட்டையாகவே இருக்கிறது. நகரத் தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் மீண்டும் உமா விஜயன் தலைவராக வந்திருப்பார்.


ஆனால் திமுகவின் அராஜக போக்கினால் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது. மக்கள் பிரச்சனையில் திமுக கரை காட்ட வில்லை இதனால் மக்களுக்கு நலத்திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போட்டுவிட்டனர். மேலும் திருமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் முதல் முதலில் அதிமுக அம்மா தலைமையில் நிதி ஒதுக்கி அதற்கு பூமி பூஜையும் போட்டது அதிமுக அரசுதான். ஆனால் அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பொய் கூறுகின்றனர்.
கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக நீக்கி விடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தால் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆனால் இன்றைக்கும் சுங்கச்சாவடியில் வாகனங்கள் வரி வசூல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தும் அரசு தான் திமுக அரசு என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்,எஸ்.சரவணன், ஒன்றிய செயலாளர் அன்பழகன் ,மகாலிங்கம், ராமசாமி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் லதா ஜெகன், கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, சாமிநாதன், உச்சப்பட்டி, செல்வம், மற்றும் வழக்கறிஞர் பிரிவு தமிழ்ச்செல்வன் வாசி மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment