ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்.... ஆண்டாள் கோவில் நிர்வாகம் பல்வேறு அரசு விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்ச்சை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 17 December 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்.... ஆண்டாள் கோவில் நிர்வாகம் பல்வேறு அரசு விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்ச்சை.

 


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைந்த இசையமைப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தி கருவறைக்குள் வெளியில் நிற்கச் சொன்ன ஜீயர்.... ஆண்டாள் கோவில் நிர்வாகம் பல்வேறு அரசு விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக சர்ச்சை.


விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற அரசின் முத்திரைச் சின்னமாக ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி பூர கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாஜக ராஜ்யசபா உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை வரவேற்ற இந்து அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு அரசு விதிமீறல்களில் ஈடுபட்டு வரவேற்பு அளித்ததாக கூறப்படுகிறது. கடவுள்களைத் தவிர மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ள நிலையில் இளையராஜா மற்றும் உடன் இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர் என்று அழைக்கப்படும் சடகோப ராமானுஜ ஐயர், ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானு ஜீயர் ஆகியோர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்கி கோவில் யானை வரவேற்ப்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய உற்சவர்கள் அமைந்துள்ள அர்த்த மண்டபம் எனப்படும் கருவறைக்குள் நுழைந்தார், அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் செய்கை தெரியாது திகைத்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad