திருப்பரங்குன்றம் கோயில் விடுதியில் தங்கிய இளம் பெண் தூக்குமாட்டி தற்கொலை .உடன் இருந்தவர் தலைமறைவு திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 17 December 2024

திருப்பரங்குன்றம் கோயில் விடுதியில் தங்கிய இளம் பெண் தூக்குமாட்டி தற்கொலை .உடன் இருந்தவர் தலைமறைவு திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை.

 


மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விடுதியில் தங்கிய இளம் பெண் தூக்குமாட்டி தற்கொலை .உடன் இருந்தவர் தலைமறைவு திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை.



மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதியில் நேற்று இரவு கேரளாவை சேர்ந்த இருவர் (பெண் - ஆண்) அறை எடுத்து தங்கினர்.


இந்நிலையில் இன்று 10 மணியளவில் அறை சுத்தம் செய்ய ஊழியர் சென்ற போது பெண் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த ஊழியர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.


இதனை தொடர்ந்து போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கல்கோத்தி யைச் சேர்ந்த பரமசிவம் மகன் பழனிச்சாமி (வயது 35) என்பது தெரிவந்தது.


தற்போது பழனிச்சாமியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது மேலும் அவர் கேராளா சென்று இருக்கலாம் என  காவல்துறையினர் விசரணை செய்து வருகின்றனர்.


விடுதி அருகில் இறந்த பெண் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இறந்தவர் தூக்கு மாட்டி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோயில் விடுதியறையில் இளம் தூக்கு மாட்டிய சம்பவம் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad