விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் எம்எல்ஏ திடீர் ஆய்வு.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம் எல் ஏ நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் எம்எல்ஏ.விடம் பள்ளி சம்பந்தமாக பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
அதில் பள்ளியில் கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை துப்புரவு பணியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது குறிப்பாக வணிகவியல் மற்றும் கணிதவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது இதனால் மாணவிகளின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுகிறது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள கழிப்பறைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர் செல்லம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சௌந்தரபாண்டி பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஊர்வல லிங்கம் அன்பு மாயன் முரளி ரவி ராமலிங்கம் பொன் சிவா மேயர் காசி விஜய் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் போத்திராஜன் செயலாளர் விக்கிரவாண்டி கிளைச் செயலாளர் அன்பு கிளை நிர்வாகிகள் சௌந்தரராஜன் மாயாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஐயப்பன்எம் எல் ஏ விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிக்கு நான் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது உசிலம்பட்டி தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மிதிவண்டி வழங்குவது மற்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னை அழைப்பார்கள் ஆனால் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்திருக்கிறேன் ஆனால் இங்குள்ள பள்ளி நிர்வாகம் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைப்பதில்லை ஆகையால் நானும் வருவதில்லை தற்போது பள்ளியில் ஒரு சில விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதாக கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறேன் குறிப்பாக இங்கு தற்காலிக ஆசிரியராக பணிபுரியும் மூர்த்தி என்பவர் மீது மாணவி பாலியல் புகார் அளித்ததன் அடிப்படையில் அது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக வந்துள்ளேன் அது குறித்து தலைமை ஆசிரியரிடம் கலந்து பேசி இருக்கிறேன் புகாருக்குள்ளான ஆசிரியர் மூர்த்தியை எந்த காரணம் கொண்டும் இனிமேல் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது அப்படி அனுமதித்தால் நானே பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறேன்.
மேலும் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிப்பதற்கு விரைவில் தமிழக முதல்வர் அவர்களை சந்திக்க இருக்கிறேன் இதற்கு முன்பு தொகுதி சம்பந்தமாக நான் அளித்த கோரிக்கைகளை மாற்றுக் கட்சி எம்எல்ஏ என்பதால் தமிழக அரசு நிறைவேற்ற வில்லை இனிமேலாவது தொகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு எனது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன் இதை தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக கூறிக் கொள்கிறேன் இவ்வாறு கூறினார் இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment