மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப தனது தலைமையில் காவல் கரங்கள் எனும் திட்டத்தை துவக்கியுள்ளார் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 12 December 2024

மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப தனது தலைமையில் காவல் கரங்கள் எனும் திட்டத்தை துவக்கியுள்ளார்

 


மதுரை மாநகர காவல் ஆணையர்  முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப  தனது தலைமையில் காவல் கரங்கள் எனும் திட்டத்தை துவக்கியுள்ளார்.


இதன்படி மதுரை மாநகருக்குள் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட இயலாத  வயோதிகர்கள், நோயாளர்கள் போன்றவர்களை மீட்பதும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதும், அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைப்பதும் இது போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாக நடத்திவருகிறார்.


மேலும் இந்த காவல் கரங்கள் திட்டத்தில் உறுப்பினராக நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்தையும்  சேர்த்து அங்கீகரித்துள்ளார்.


இதன்படி கடந்த 08-12-2024 அன்று
மதுரை மாநகர் ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்  தலைமையில் மாநகர காவல் துறையினர் மற்றும் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லம் நிர்வாகம் இணைந்து
கோவில்,பேருந்து மற்றும் இரயில்
நிலைய வளாகத்தில் ஆதரவற்ற நிலையில் தகுந்த உணவு, உடை, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் இன்றி சுற்றி திரிந்த 14  பேர் ஆண்கள் 4 பேர், பெண்கள் 10 பேர் முதியோர்களை கண்டறிந்து அவர்களை தற்சமயம் திருநகரில் இயங்கி வரும் நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்தில் சேர்த்துள்ளனர்.


மேலும் இவர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்கள் உறவினர்களுடன் சேர்த்து வைக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.


மாநகர காவல் துறையினர் மற்றும்  நம் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்தின் இந்த சேவையை பொதுமக்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad