சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் திறந்தவெளியில் உள்ள மின் மீட்டர்கள் மழையில் நனைந்ததால் மின்சாரம் துண்டிப்பு.
மதுரை மாவட்டம்
சோழவந்தான் பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக மீட்டர்கள் ஒரு வருட காலம் ஆகியும் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் திறந்த வெளியில் மழைநீர் வடியும் இடத்தில் தற்காலிகமாக மீட்டர்கள் இருப்பதால் மின்சார மீட்டர்களில் மழைநீர் வடிந்து மீட்டர்கள் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.. இதனால் பயணிகள் அமரும் அறைகள், நேரக் காப்பாளர் அறை, புறக்காவல் அறை, குடிநீர் சுத்திகரிப்பு அறை, பொருட்கள் வைக்கும் வரை மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை சோழவந்தான் பேருந்து நிலையத்தில் மின்விளக்கு களுக்கான மீட்டர் ஆகிய அனைத்தும் திறந்த வெளியில் இருப்பதால் மின்சார மீட்டர்கள் பாதிக்கப்பட்டு மின்சாரம் இன்றி அவதி அடைகின்றனர்..
பேருந்து நிலையம் அமைக்கும் போது படிக்கட்டுகளில் அருகில் UG box மூலம் மின் இணைப்பு கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட மீட்டர் இருக்கும் பகுதியில் தற்போது வரை காலியாக உள்ளது.. இந்த பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment