மக்காச்சோள பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று கள்ளிக்குடி வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராம பகுதியில் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 2500க்கும் அதிகமான மக்காச்சோளம் பயிர்கள் வளர்ச்சி நிலை முதல் பூ பருவம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளது.ஒரே பயிர் சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்சி முறைய விவசாயிகள் கையாள வேண்டும். பயிர் சாகுபடி செய்த பின்னர் இன கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு ஐந்து அல்லது விளக்கு பொறி ஒன்று என்ற அளவில் அமைத்து பூச்சிகளை கவர்ந்து அளிக்காமல் சூரியகாந்தியில் தட்டை பயிறு போன்ற பயிர்களை வாய்ப்பு பயிர்களாக பயிரிடுவதன் மூலம் கவர்ந்திழுத்து பூச்சிகளை அழிக்கலாம் 20 முதல் 25 நாட்கள் உள்ள பயிருக்கு குளோரான்ட்ரானிலிப்ரோல் பூச்சிக்கொல்லியை ஐந்து முதல் ஆறு மில்லி நீதான் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் குருத்துப் பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும். 40 முதல் 45 நாட்கள் உள்ள பயிருக்கு உயிரியல் பூஞ்சான் கொல்லி மெட்டோரியல் அணிசோபைலியை 80 கிராம் அல்லது 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். ஐந்து மில்லி லிட்டர் என்ற அளவில் 10 மில்லி லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.நோய் தாக்குதல் தெரிந்தால் கார்பெண்டிஷன் 25 கிராம் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேலையில் தெளிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய பூச்சிக்கொல்லியை மறுமுறை பயன்படுத்தக் கூடாது பேட்டரி ஸ்பிரேயர் அல்லது கைத்தெளிப்பான் ஆகியவற்றை பயன்படுத்தி தெளிப்பு மேற்கொள்ள வேண்டும் விவசாயிகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகலாம் என கள்ளிக்குடி உதவி வேளாண்மை அலுவலர் சந்திர கலா தெரிவித்தார்.
மதுரை திருமங்கலம் செய்தியாளர் R.வினோத் பாபு.
No comments:
Post a Comment