மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் கந்தூரி கொடுப்பதற்காக ஆட்டு கிடாயுடன் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் மல்லடிபட்டியை சேர்ந்த சையது அபுதாகிர் (வயது 53) தனது குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் பாஷா சமாதியில் கந்தூரி கொடுப்பதற்க ஆட்டு கிடாயுடன் வந்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஆட்டு கிடாயுடன் செல்ல அனுமதி இல்லை என கூறினர்.
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் பள்ளிவாசல் மற்றும் இதர இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் மலைக்கு செல்லும்பழனி ஆண்டவர் கோவில் படிக்கட்டு அருகே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர் அதனைத் தொடர்ந்து
திருப்பரங்குன்றம் சார்பாக காவல் உதவி ஆணையர்கள் குருசாமி, கணேசன், சீதாராமன், சிறப்பு நுண்ணறிவு உதவி சண்முகம், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில் பரபரப்பாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment