கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்காததால் , ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை சூழ்ந்துள்ள கழிவு நீர் தெப்பம் - கொசுக்கள் உள்ளிட்ட கொடிய விஷ ஜந்துக்கள் பரவுவதால் நோய் தொற்று பரவுதுடன் , உயிர் ஆபத்து ஏற்படும் அவல நிலை - கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சுந்தரகுண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்து வெள்ளம் என திரண்டு நிற்பதால் , பள்ளி குழந்தைகள் முதல் கிராம மக்கள் வரை அவ்வழி செல்ல முடியாமல் அவதிப்படுவதுடன், துர்நாற்றத்துடன் வீசும் கழிவு நீரால் கொசுக்கள் பரவி கொடிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்படுவதுடன், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கழிவு நீர் வாய்க்கால் அமைக்காதது இதற்கு காரணம் எனவும்,
மழைக்காலங்களில் தேங்கும் கழிவுநீர் செல்ல வழி இன்றி, பள்ளி வளாகத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன், குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளில் தேங்கியிருப்பதால் நோய் தொற்று பரவும் அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவும் , தேங்கியுள்ள கழிவுநீர் வழியாகவே குடியிருப்பு வாசிகள் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதால் கொடியே நோய் பரவும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் , தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் வாக்காளர் அடையாள அட்டையையும், ரேஷன் அட்டையையும் அரசு அலுவலகத்தில் ஒப்படைப்பது மற்றும் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் கிராமத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment