திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் குவிந்த பக்தர்கள்; - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 15 December 2024

திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் குவிந்த பக்தர்கள்;

 


திருப்பரங்குன்றம் கிரிவலத்தில் குவிந்த பக்தர்கள்; 


விடுமுறை மற்றும் கார்த்திகை பௌர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று சாமி தரிசனம்.


தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் என்பதால் அதிகளவு பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்து வருகின்றனர்.


வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் கல்யாண கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.


மேலும் இங்கு பௌர்ணமி அமாவாசை நாளில் திருப்பரங்குன்றம் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலை சுற்றிலும் கிரிவலம் செல்லுவது வழக்காமாகும்.


இன்று கார்த்திகை மாத கடைசி பௌர்ணமி என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல் காட்சியளிக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்றும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad