மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் துணை முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
துணை முதல்வர், விளையாட்டு துறை அமைச்சரும் ஆன உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணி லவ்மாறன் தலைமையில் சுமார் 200பேர்க்கு5லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான மேலைக் கோட்டையில் நடைபெற்றது. மணிமாறன் பேசுகையில் திமுகவை எளிதில் அழித்து விடலாம் என்று கூறிவருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கையில் எந்த ஒரு கட்சியும் நெருங்க முடியாது என்று கூறினார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார். நிகழ்ச்சியில் திருமங்கலம் தொகுதி மேற்பார்வையாளர் அலாவுதீன், மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் மாவட்டத் துணைச் செயலாளர் லதா அதியமான் துணை சேர் குழு உறுப்பினர் ஞானசேகரன் பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஆதிமூலம், திருமங்கலம் திமுக
நகர செயலாளர் மூ.சி.சோ. ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், திருமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபாண்டியன், கள்ளிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, திருமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சண்முகம் கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் கீர்த்திகா தங்கப்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் சோனியா விஜய், பரமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் D.தங்கப்பாண்டிB.E., செய்திருந்தார்.
No comments:
Post a Comment