மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அஷ்டமி சப்பர வீதி உலா : - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 23 December 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அஷ்டமி சப்பர வீதி உலா :

 


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அஷ்டமி சப்பர வீதி உலா :  


ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம். பக்தர்களுக்கு சுவாமி படியளக்கும் நிகழ்வு நடைபெற்றது.



மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. இதில் சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம், தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 


அதே போன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நகரின் வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் பிரசித்தி பெற்றது.


இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலை முத்தாய்ப்பானது. இந்த விழா அன்று சுந்தரேசுவரர் - பிரயாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி.,


கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை அடைவர். 


இதில் மீனாட்சிஅம்மன்  சப்பரத்தை பெண்கள் மட்டும் இழுத்து வருவது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள்.


பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை அதனால் பொதுமக்கள் அரிசியை ஆர்வமுடன் சேகரித்து வழிபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad