தன்னம்பிக்கை அறக்கட்டளையின் முப்பெரும் விழா
மதுரை மாவட்டம், நாகமலையில் தன்னம்பிக்கை மனிதர்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூய அந்திரேயா ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அருள்திரு.அறிவர்.ஆர்.சாமுவேல் அவர்கள் தலைமை வகித்தார். சீனியர் மேனேஜர் மதன் விஜயகுமார் மற்றும் கீதா மதன் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் ஷேக் மஸ்தான் வரவேற்றார்.
விழாவின் விளக்க உரையினை தன்னம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் கூறினார்.
கௌரவ அழைப்பாளராக தி.ஒன்றிய கவுன்சிலர் ஆசைத்தம்பியும், சிறப்பு அழைப்பாளர்களாக சஞ்சய் நினைவு அறக்கட்டளை நிறுவனர் சுசிலா தங்கவேல் மற்றும் மீனா குமாரி, டிடிஆர்ஓ சிவனேசன், சிம்மக்கல் முதியோர் இல்ல மேலாளர் கிரேசியஸ், வழக்கறிஞர் கார்த்திக் குமரன் கலந்து கொண்டு 60 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினர். விழாவில் மஞ்சப்பை விழிப்புணர்வு செய்து அனைவருக்கும் இலவசமாக மஞ்சப்பையும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பகுதி மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பி.என்.ஆர் சமூக அறக்கட்டளை சார்பாக பால்பாண்டி குழுவினர் அனைவருக்கும் உணவுகள் வழங்கினர்.
இந்நிகழ்வினை ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லா தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் லோகேஸ்வரன் நன்றிகூற விழாவானது இனிதே நிறைவடைந்தது..
No comments:
Post a Comment