திருமங்கலத்தில் அருள் மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கு படியளக்கும் வைபவம் அஷ்டமி ஷப்பரம் நகர் வலம்.
மதுரையம்பதியில் 64 லீலைகள் நடந்த நிகழ்ச்சி பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டு என்று பல்வேறு லீலைகள் மதுரையில் நடந்தேறியது.அதில் மிகவும் பிரசித்தி பெற்றது.ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஜீவராசிகளுக்கு படியளக்கும் வைபவம் அஷ்டமி ஷப்பரம் அனைத்து மாசி வீதிகளில் மீனாட்சி சொக்கநாதர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி ஷப்பரம் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. அதிகாலையில் சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து சாமி புறப்பாடு ஆகி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு அருட் பிரசாத்தை வாங்கி சென்றனர்.
No comments:
Post a Comment