திருமங்கலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
2011 தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாமல் 3 வது இடத்துக்கு சென்றது அதே நிலை 2026 தேர்தலில் வரும்.
2 கோடி தொண்டர்களும் எடப்பாடியார் முதலமைச்சராக வர விரும்பினார்கள் நிச்சயம் நடக்கும்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
கழக செயற்குழு, பொதுக்குழுவில் கழக பொதுச் எடப்பாடியார் ஆற்றிய வரலாற்று பேரூரையின்
சிறப்புகளையும், நிறைவேற்ற பட்ட முத்து முத்தான 16 தீர்மானங்களையும், ஒவ்வொரு வாக்காளர்களிடத்தில் எடுத்துச் சென்று விடவும்,ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பு குறித்தும், மதுரை மேற்கு புறநகர் மாவட்டம், திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது இதற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் சி.முருகன், கே. திருப்பதி, தமிழ்செல்வன், பஞ்சவர்ணம், உஷா, பொதுக்குழு உறுப்பினர்கள் நாகராஜ் ,சுதாகரன், டாக்டர் பாவடியான், சுமதி ,மாவட்ட அணி நிர்வாகிகள் பால்பாண்டி, காசிமாயன், லட்சுமி, மகேந்திர பாண்டி, பாஸ்கரன், துரைப்பாண்டி, ஜஹாங்கீர்,ராம்குமார் ,சரவண பாண்டி, சந்திரன், செல்லம்பட்டி ரகு, ராமகிருஷ்ணன்,ஆர்யா, சிங்கராஜா பாண்டியன், சதீஷ் சண்முகம், சிவசக்தி ,உசிலை ராஜாங்கம் மற்றும் லதா ஜெகன், வளர்மதி அன்பழகன், மீனாட்சி மகாலிங்கம் ,கலையரசி கண்ணன், சண்முகப்பிரியா, முனியம்மாள், மகாலட்சுமி, கவிதா ராஜா ,ராஜா,அன்ன முத்து, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் கே தமிழரசன், ஐ தமிழழகன், எஸ் எஸ்.சரவணன ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
மற்றும் கழக அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன், தேனி வி.டி. நாராயணசாமி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே மாணிக்கம், நீதிபதி, தவசி, கருப்பையா ,ஏகேடி ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் ஜெயராமன், சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், அன்னபூர்ணா தங்கராஜ், மாணிக்கம், இளங்கோவன், ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், தனராஜ், ஏகேபி சிவசுப்பிரமணியன், ராஜசேகர், ஜான் மகேந்திரன் ,முத்துச்செல்வம், விஜய் பாண்டியன், இளஞ்செழியன்
மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், கண்ணன், ராமையா, செல்லம்பட்டி ராஜா, பிச்சை ராஜன், ராமசாமி,பிரபுசங்கர், அரியூர் ராதாகிஷ்ணன், ராமையா, நகர செயலாளர்கள் விஜயன் பூமா,விஜயன், பேரூர் கழகச் செயலாளர்கள் முருகேசன், நெடுமாறன், பாலசுப்பிரமணி, வாசிமலை, அசோக் குமார் ,அழகு ராஜ்குமார்,குமார்,உசிவை தினேஷ்குமார்,தலைமை கழக பேச்சளார்கள் மலைச்சாமி,
தமிழரசன்,மணிமுரசு,வக்கீல் முத்துராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
ஆர்.பி உதயகுமார் பேசியதாவது
தேர்தல் பணி குறித்து தற்போது ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது இன்னும் 16 மாதம் தான் உள்ளது இன்று முதல் களப்பணி ஆற்றிட வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மட்டும் 10,500 வாக்குகள் கூடுதலாக பெறப்பட்டது, இதைப் பெற்றுத் தந்தது நீங்கள் தான், நீங்கள் மனது வைத்தால் இரட்டை இலை நிச்சயம் மலரும், இந்த இயக்கத்தில் தொண்டர்கள் தான் நிரந்தரம், இன்றைக்கு இரண்டு கோடி தொண்டர்களும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் நிச்சயம் அது நடக்கும். எடப்பாடியார் சொன்னது போல யானைக்கு தும்பிக்கை போல, மனிதனுக்கு நம்பிக்கை தான் முக்கியம், நம்பிக்கையுடன் செயல்பட்டால் எதையும் நாம் வெற்றி பெறலாம், நம்பிக்கை இழந்தால் வெற்றிபெற முடியாது.
2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக ஆட்சிக்கு வர முடியாது திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மமதையுடன் திமுக சொல்கிறார்கள், இதே போலத்தான் 2011 ஆண்டில் திமுக சொன்னார்கள் ஆனால் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சர் ஆனார் ,திமுக எதிர் கட்சியாக கூட வராமல் 3வது இடத்திற்கு சென்றது, அதேபோல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள் ஏனென்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும்.
தை மாதம் எடப்பாடியார் மாபெரும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், இந்திய அரசியலை திரும்பிப் பார்ப்ப வகையில் இந்த பிரச்சாரம் இருக்கும், தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் நாம், எடப்பாடியாருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.
மக்கள் பிரச்சனை என்றால் நம் உயிரை கொடுத்தாவது, அதை அதைப்போராடி மக்களுக்கு பெற்று தருவோம் என்ற நிலைப்பாட்டை நாம் உருவாக்கிட வேண்டும் கொசு பிரச்சினை முதல், கோட்டை பிரச்சனை வரை மக்களுக்கான போராட தயாராக இருக்க வேண்டும்
No comments:
Post a Comment