மதுரை விமான நிலையத்தில் 24 மணி விமான சேவை இன்று முதல் துவங்கியது - இரவு நேர விமான சேவை துவங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி.
மதுரை விமான நிலையம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி 24 மணி நேரமும் செயல்படும் என இந்திய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில் அதன் முதல் கட்டமாக இன்று20/12/2024 முதல் மதுரையில் இருந்து இரவு 10:45 மணிக்கு கடைசி இண்டிகோ விமானம் சென்னை புறப்படும் விமான சேவை தற்போது துவங்கியுள்ளது.
இரவு நேர விமான சேவை துவங்கப்பட்டதைத்தொடர்ந்து இதை கொண்டாடும் விதமாக இண்டிகோ நிர்வாக ஊழியர்கள் மற்றும் மதுரை விமான நிலைய அதிகாரிகள் மதுரை விமான வளாகத்திற்குள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுக்குறித்து இரவு நேர விமான சேவை முதல் முறை பயன்படுத்திய பயணிகள் தெரிவித்ததாவது
தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக உள்ளதாகவும் இதற்கு முன்னதாக இரவு நேர விமான சேவைகள் இல்லாததால் பயண திட்டங்களை மாற்ற வேண்டிய சூழல் இருந்ததாகவும் தற்போது அந்த சூழல் இல்லை என்பதும் இரவு நேரத்தில் ஒரே ஒரு விமானம் சேவை மட்டும் தற்போது உள்ளதாகவும் இன்னும் பல விமான சேவைகளை இணைக்க வேண்டும் என்பதும் சென்னை மட்டுமல்லாது பிற நாடுகளுக்கும் செல்ல இரவு நேரமும் சேவை துவங்கப்பட வேண்டும் என்பதை மதுரை விமான நிலையத்தில் இருந்து இரவு நேர விமான சேவையை பயன்படுத்திய பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment