விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் புயல் மழையால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்.
மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல் விவசாயம் செய்து உள்ளனர் இதில்200 ஏக்கருக்கு மேல் நெல்
விளைச்சல் ஆகும் முன்பு தற்போது வீசிய புயல் சூறாவளி காற்று மழையால் நெற்கதிர்கள் பால் பிடிக்காமல் வயலில் சாய்ந்து விட்டது இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது
இப்பகுதி விவசாயிகள் கூறும் பொழுது நாங்கள் ஏக்கருக்கு 30 ஆயிரத்துக்கு மேல் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளோம் வருகிற தை மாதம் பத்தாம் தேதிக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெல் பால் பிடிக்கும் நேரத்தில் தற்போது வீசிய புயல் மற்றும் சூறாவளி காற்றில் மழையில் விவசாய நிலத்தில் உள்ள அனைத்து பயிர்களும் சாய்ந்து விட்டன இதனால் நெல் விளைச்சல் இல்லாமல் சாய்ந்ததால் அனைத்தும் அழுகி மீண்டும் விளைச்சல் ஆகாத நிலையில் சேதம் அடைந்துள்ளது இதனால் எங்களுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளது விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை சேதமடைந்துள்ளதால் ஒவ்வொருவருக்கும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஆகையால் வருவாய்த்துறையினர் உடனடியாக சேதமடைந்த நெல் வயல்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும்அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment