மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிகளுக்கு செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
துணை முதல்வர், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் முன்னிலையில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவுறுத்தலின் படி நாம் அனைவரும் ஒன்று இணைந்து திமுகவை வெற்றிபெற செய்ய வேண்டும்.என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர்கள் தனசேகரன், மதன் குமார், ஆலம் பட்டி சண்முகம், நகர் கழக தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் விமல்,கீர்த்திகா தங்கபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment