கந்தசஷ்டி நான்காம் விழா திருப்பரங்குன்றத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மயில் மேல் அமர்ந்து அலங்காரத்தில் சண்முகர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 5 November 2024

கந்தசஷ்டி நான்காம் விழா திருப்பரங்குன்றத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மயில் மேல் அமர்ந்து அலங்காரத்தில் சண்முகர்



 கந்தசஷ்டி நான்காம் விழா திருப்பரங்குன்றத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மயில் மேல் அமர்ந்து அலங்காரத்தில் சண்முகர்.



மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருள் மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தினை ஆறு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதேபோல தினமும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு காலையிலும் மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெறும் விழாவின் நான்காம் நாளான இன்று சண்முகர் சன்னதியில் சண்முகா அர்ச்சனை நடைபெற்றது.


சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்கள் சமகாலத்தில் தீபாராதனைகள் செய்யப்படும் தொடர்ந்து சுவாமிக்கு புளி சாதம், லெமன் சாதம், சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், தேங்காய் சாதம், வடை ஆகியவை சுவாமிக்கு பிரசாதமாக வைக்கப்பட்டது. தொடர்ந்து சண்முகர் மயில்மேல் அமர்ந்த அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார். வழக்கமாக சண்முகர் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் வைகாசி விசாகத்தின்போது சண்முக சன்னதியில் இருந்து புறப்பாடாகி விசாக கொரடு மண்டபத்தில் எழுந்தருளும் சண்முகர் நின்ற கோலத்திலேயே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவார்.


கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாள் மட்டும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை ஆறாம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் ஏழாம் தேதி சூரசம்கார லீலையும் எட்டாம் தேதி கந்தசஷ்டி தேரோட்டமும் நடைபெறும் விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad