நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்-கடை நடத்திய உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று கேள்வி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 5 November 2024

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்-கடை நடத்திய உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று கேள்வி.


நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றம்-கடை நடத்திய உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் என்று கேள்வி.



மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பழங்காநத்தம் முதல் தனக்கன்குளம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் சாலை பணி நெடுஞ்சாலை துறையினரால் கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலியிடம் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று திருநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள 12 வணிக வளாக கட்டிடங்கள் நெடுஞ்சாலைத் துறையினரால் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு கடைகள் அகற்றப்பட்டது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வணிக வளாகக் கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டனர். இந்த இடத்தில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு மேலாக முறையாக அட்வான்ஸ் கட்டி மாதம் வாடகை செலுத்தி வருகிறோம். இந்த இடம் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென அரை மணி நேரத்தில் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். மேலும் ஏற்கனவே நாங்கள் கட்டி உள்ள அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டதற்கு முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். சாலைக்கு 26 அடி தேவைப்படும் நிலையில், எங்கள் கடைகள் அதற்கு அடுத்த அளவில் தான் உள்ளது ஆனாலும் எங்கள் கடைகளை எடுத்துள்ளார்கள் என குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த கடைகளை நம்பி இருக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது உடனே அங்கு திருப்பரங்குன்றம் டிஎஸ்பி குருசாமி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டு கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினார் பின்னர் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர்.


நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த நடவடிக்கைகளால் வேதனையடைந்த கடை உரிமையாளர்கள் 25 ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள் நாங்கள் செலுத்திய முன்பணம் என்ன ஆயிற்று எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தாருங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad