ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 14 November 2024

ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.


ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தில்   குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.



விழாவிற்கு வட்டக்கிளையின் தலைவர் ஜனாப் கே.மஹபூப்பாட்சா தலைமை தாங்கினார் விழாவில் சிறப்பு விருந்தினராக திருமங்கலம் கம்பன் கழக செயலாளர் முனைவர் அய்யாதுரை கலந்து கொண்டு சிறப்பித்தார் குழந்தைகள் தின விழாவில் நமச்சிவாயம், காசிராஜன், முனைவர் அய்யாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் வட்டக்கிளையின் தலைவர் இவரது உரையில் நமச்சிவாயம் அவர்களின் விருப்பப்படி குழந்தைகள் தின விழா சங்கத்தில் கொண்டாடப்படுவதாகவும் இதற்கு பிலாவடியான் அவர்கள் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார் இவ்வாறன விழா சங்கத்தில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியாகவும்,புது அனுபவமாக இருப்பதாகவும் தெரிவித்தார்விழாவில் உரையாற்றிய நமச்சிவாயம்  கடவுள் வாழ்த்து இசைத்த பின்னர் உரையை துவக்கினார் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார் பள்ளி கோவில் குழந்தை கருவறையில் உள்ள தெய்வம், குழந்தைகளை சமுதாயத்தில் நல்லவர்களாக வளர்ப்பது பெற்றோரின் கடமை, பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று தருவது ஆசிரியர்களின் கடமை இளைய தலைமுறையை பண்புள்ளவர்களாவும், ஒழுக்கமுள்ள தலைவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்றார்.பாரதியார், விவேகானந்தர் போன்ற தலைவர்களின் உரையை மேற்கோள் காட்டி உரையாற்றினார். காசிராஜன் இவரது உரையில் பள்ளியில் குழந்தைகளின் திறமையை வளர்க்க பேச்சு போட்டி,, விளையாட்டு போட்டி போன்ற அறிவையும், உடல் வலிமையும் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமைகள் வெளிக்கொண்டு வரப்படுகிறது என்றார்! பேச்சுக்கிடையே விடுகதைகளைப் போட்டு கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார். முனைவர் அய்யாதுரை  குழந்தைகள் பற்றி உரையாற்றிவிட்டதால் இவர் இலக்கியம் பற்றி உரையாற்றினார். குறிப்பாக கண்ணதாசன் எழுதிய பாடல்களை குழந்தைகள் பற்றி தெரிவிதுள்ளதை பாடலுடன் கூட்டத்தில் உள்ளவர்கள் ரசிக்கும்படி பாடினார்! கண்ணதாசன் கவிதைகளையும் அதன் பொருளையும் எடுத்துரைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்குறிப்பாக நோக்குதல் என்பதும் பார்வை என்பதும் வெவ்வாறனவை! பார்வை ஒருவரை சாதாரணமாக பார்ப்பது! நோக்குதல் என்பது அவரை உள்ளண்புடன் நொக்குவது! ராமாயணத்தில் இராமன், சீதையை நோக்கினான், சீதை,இராமனை நோக்கினாள் இதை கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்கிறார்! அதாவது இருவருடைய உள்ளமும் மாறியது! இவ்வாறு மாறியதால்தான் இராமன் உள்ளத்தில் சீதை புகுந்து சீதையை மணக்க இராமன் வலிமை மிக்க தனுசு வில்லை முறிக்க காரணமாக அமைந்தது .  .எம் . நடராஜன் குழந்தைகள் பற்றிய கவிதையை வாசித்தார்  .நிகழ்ச்சியின் நிறைவாக சங்கத்தின் செயலாளர் ரகுநாதன் நன்றி தெரிவித்தார். குழந்தைகள் தின விழா கூட்டத்தில் பாண்டி, பிலாவடியான் வெங்கி ட கிருஷ்ணன், நாகலிங்கம், சுப்ரமணியம், ராஜேந்திரன், கன்னையா,சங்கர நாராயணன், மாதவன்,, பொன்னையா, மகாஜன பாண்டி, ஃபெரோஸ்கான், ராஜாமணி, நிர்வாகிகள்.பாலகிருஷ்ணன், முருகேசன் . பிரேமாராணி,, பாண்டிசெல்வி, தமிழ் குழலி,முத்து லெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவை நடத்த காரணமாக இருந்த நமச்சிவாயம் அவர்களுக்கு சங்கத்தின் இணை செயலாளர் எம்.நடரஜன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்! சிறப்பு விருந்தினர் முனைவர் அய்யாதுரை  பிலாவடியான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்  விழாவில் கலந்து கொண்ட பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன், எம்.நடராஜன், பாண்டிச்செல்வி ஆகியோர்  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad