சமுதாய நல்லிணக்கத்திற்க்காக ஏழு நாட்களுக்கு முன்பு 7 கிராம மக்கள் இணைந்து ஏழு சப்பரம் இணைந்து 10000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட முத்தாலம்மன் திருவிழா.
கல்லுப்பட்டி அருகே 7 கிராம மக்கள் இணைந்து முத்தாலம்மன் கோவில் ஊர் சாத்து திருவிழா 7 நாள் திருவிழாவாக நடைபெற்றது ஏழு ஊர் கிராம மக்கள் கல்லுப்பட்டி அம்மாபட்டி வன்னி வேலம்பட்டி தேவன் குறிச்சி காடனேரி பேரையூர் rஆகிய கிராமங்களை சேர்ந்த ஏழு கிராம மக்கள் சுமார் 10000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையிலேயே முத்தாலம்மனை தரிசிக்க சப்பர திருவிழாவிலும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகில் அம்மாபட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 7 ஊர் கிராம மக்கள் தங்கள் கிராமங்களிலேயே ஏழு நாட்களுக்கு முன்பாகவே அந்த சப்பரங்களை தயார் செய்தும் மேலும் அங்கிருந்து முத்தாலம்மனை வழிபட தங்கள் ஊரில் இருந்து சப்பரங்களை இரவில் கொண்டு வந்தும் அதிகாலை முத்தாலம்மனை தரிசித்தும் பிறகு 7 ஊர் சப்பரம் ஒன்றாக பிரிந்து தங்கள் கிராமங்களுக்கு செல்வது ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவானது நடைபெறுவது.
முத்தாலம்மன் ஊர்சாத்து திருவிழாவின் போது 5000 மேற்பட்ட பொதுமக்கள் கிராம மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சப்பர வழிபாடு செய்வர்
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment