குளமாக மாறிய திற்பரப்பு நெடுஞ்சாலை
திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட திற்பரப்பிலிருந்து குலசேகரம் செல்லும் சாலை நடுவில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்லும் இந்த சாலையில் வாகனங்கள் செல்வதற்கான சரியான சாலை வசதிகள் இல்லை. சாலைகள் பழுதடைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் சரி செய்வது கிடையாது என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment