சாலையில் பள்ளம் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்கா அருமனை பேரூராட்சிக்குட்பட்ட அருமனையிலிருந்து குலசேகரம் செல்லும் பிரதான சாலையின் நடுவே அடிக்கடி பள்ளம் தோண்டுவது வேடிக்கையான விஷயம், அதுவும் மழைக்காலம் என்றால் பள்ளங்கள் தோண்டுவது அதிகம். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதை சரி செய்ய அருமனை பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு மழைக்காலங்களில் பள்ளங்கள் தோண்டுவதை தவிர்க்க வாகன ஓட்டிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment