சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் இரண்டு ஆண்டுகளுக்குப் முன்பு மிதந்த ஆண் பிணம் கொலை செய்ததாக இரண்டு பேர் போலீசில் சரண்.
மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை பாலம் வைகை நதியில்9.5.22 மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் பிணம். சோழவந்தான் போலீசார் பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் மதுரை மாநகர் தனிப் பிரிவில் இரண்டு பேர் சரணடைந்தனர். இவர்களை போலீசார் விசாரணை செய்ததில் சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை வில்லாபுரம் சேது மகன் பாலமுருகன் வயது 35 என்பவரை கொலை செய்ததாக கூறியதாகவும் இதன் பேரில் சோழவந்தான் போலீசார் மதுரை மாநகர் சொக்கலிங்க நகர் அர்ஜுனன் மகன் செந்தில் என்ற சூர்யா செந்தில் வயது 40, மதுரை மாநகர் சம்பட்டி புறம் சையது சுலைமான் மகன் சையது ஜாபர் அலி வயது 41 ஆகிய இருவரையும் கைது செய்தனர்
கடந்த 2022 ஆம் ஆண்டு வைகை ஆற்றில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் குறித்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment