திருமங்கலம் - செக்கானூரணி சாலையில், கிராம மக்கள் சாலை மறியல் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 19 November 2024

திருமங்கலம் - செக்கானூரணி சாலையில், கிராம மக்கள் சாலை மறியல்

 


திருமங்கலம் - செக்கானூரணி சாலையில்,  கிராம மக்கள் சாலை மறியல் - தமிழக அரசின் நிதியில்,  சாலை அமைக்க ஊராட்சி மன்ற உறுப்பினர் சுயநலத்திற்காக எதிர்ப்பு.



   மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிண்ணிமங்கலம் பஞ்சாயத்தில், விஐபி நகர், K S நகரில் பகுதிக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் , தார் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும் நிலையில் , அச்சாலையை அமைக்க ஊராட்சி மன்ற உறுப்பினர் . தனலட்சுமி முருகன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததால்,
         

அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுடைய குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாலும் ,  பள்ளி குழந்தைகள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து செக்கானூரணி -  திருமங்கலம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு தமிழக அரசின் நிதியின் கீழ் சாலை அமைப்பதற்குண்டான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் போராட்டத்தின் போது கோஷமிட்டனர்.

        

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில்,  அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad