விஜய் போட்ட உத்தரவு மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தினர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு மீள்குடி அமர்வு, மாநகராட்சிக்குள்ளும் மூன்று சென்ற இடம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சின்ன உடைப்பு கிராமத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜய் உத்தரவுப்படி தெற்கு மாவட்ட தலைவர் தங்கப்பாண்டி தலைமையிலான தவெக நிர்வாகிகள் சின்ன உடைப்பு பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்
முன்னதாக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என் ஆனந்த் சின்ன உடைப்பு பகுதி போராட்டக் குழுவினரிடம் செல்போனில் பேசி தவெக சார்பில் அரசை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தலைவரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சின்ன உடைப்பு பகுதி மக்கள் பிரச்சனை குறித்தான அனைத்து ஆவணங்கள் மற்றும் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட தலைவர் இதனை நிச்சயமாக கட்சித் தலைவர் அண்ணன் விஜயிடம் கொண்டு போய் சேர்ப்போம் எனவும் நிச்சயமாக தலைவர் உங்களுக்கு உதவி செய்வார் என வாக்குறுதி அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட தலைவர் தங்கப்பாண்டி
மதுரை விமான நிலையத்திற்காக சின்ன அடுப்பு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம் கொடுத்து வருகிறார்கள் ஆனால் இந்த முறை மாற்றிய இடம் கேட்டு நியாயமான கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். இதற்காக தமிழக வெற்றி கழகம் சார்பாக எங்களது ஆதரவை தெரிவிக்கிறோம். இந்தப் போராட்டம் குறித்து தலைவர் விஜய்யிடம் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் என அழைபேசி மூலமாக பொதுச் செயலாளர் ருசியானின் தெரிவித்திருப்பதாக கூறினார். விஜயின் அடுத்த அறிவிப்பில் சின்ன உடைப்பு கிராமத்தின் பிரச்சனையை பற்றி வரும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment