மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 22 November 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்


 மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்.


கடலூர் மாவட்ட விவசாயியின் மதிப்பு கூட்டப்பட்ட பாரம்பரிய அரிசியான தூய மல்லிஅரிசி சென்னைக்கு விற்றுத்தரப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மதிப்பு கூட்டப்பட்ட பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி சென்னை வியாபாரிக்கு விற்றுத்தரப்பட்டது.

கள்வேளிப்பட்டி மற்றும் புளியம்பட்டி ஆகிய  கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் அட்சயா, ஸ்ரீ மற்றும்  கோ-55 ஆகிய நெல் வகைகள் நேரடியாக அரிசி ஆலைகளுக்கு விற்றுதரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (21.11.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.

1. கடலூர் மாவட்ட விவசாயியின்  2500 கிலோ மதிப்பு கூட்டப்பட்ட தூய மல்லி அரிசி விற்பனைக்கு வந்தது. அது  சென்னை  வியாபாரிக்கு விற்றுத் தரப்பட்டது.  கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 70/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூபாய் 1,75,000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

2. புதுக்கோட்டை மாவட்டம் குழிப்பிறை விவசாயியின் 1769 கிலோ பாரம்பரிய நெல் வகையான கருப்பு கவுனி  விற்பனைக்கு வந்தது. அது  சென்னை  வியாபாரிக்கு விற்றுத் தரப்பட்டது.  கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 100/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூபாய் 1,76,000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

3. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி விவசாயியின் 147 கிலோ துவரம்பருப்பு ஏலத்திற்கு வந்தது. ஒரு கிலோ ஒன்றுக்கு 118/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 17346/- வர்த்தகம் நடைபெற்றது.

4. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புகூட்டப்பட்ட அட்சயா அரிசி 637 கிலோ விற்பனைக்கு வந்தது.அது கிலோ ஒன்றுக்கு 59/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூபாய் 37,583/- வர்த்தகம் நடைபெற்றது.

5. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புகூட்டப்பட்ட டீலக்ஸ் அரிசி 327 கிலோ விற்பனைக்கு வந்தது.அது கிலோ ஒன்றுக்கு 54/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூபாய் 17,658/- வர்த்தகம் நடைபெற்றது.

6. கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் சக்குடி கிராம விவசாயி ஆகியோரின் 293.4 கிலோ துவரை  விற்பனைக்கு வந்தது.அது கிலோ ஒன்றுக்கு 85/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூபாய் 24,940/- வர்த்தகம் நடைபெற்றது.

7. மீனாட்சிபுரம் கிராம விவசாயியின் 10880 கிலோ அட்சயா நெல் ஏலத்திற்கு வந்தது. ஒரு கிலோ ஒன்றுக்கு 26.50/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 2,88,320/- வர்த்தகம் நடைபெற்றது.

8. திருமங்கலத்தை சேர்ந்த  இரு விவசாயியின் 2008 கிலோ எள்  ஏலத்திற்கு வந்தது. ஒரு கிலோ ஒன்றுக்கு 130/-க்கு அதிகபட்ச விலையாகவும் குறைந்தபட்ச விலையாக 122/-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூபாய் 2,46,240/- வர்த்தகம் நடைபெற்றது.

9. புளியம்பட்டி கிராம விவசாயியின் 2520 கிலோ கோ-55 நெல் ஏலத்திற்கு வந்தது. இது  நேரடியாக அரிசி ஆலைக்கு விற்றுத் தரப்பட்டது. கிலோ ஒன்றுக்கு 22.38/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 56,398/- வர்த்தகம் நடைபெற்றது.

10. விடத்தகுளம் கிராம விவசாயியின் 1490 கிலோ அட்சயா நெல் ஏலத்திற்கு வந்தது. இது  நேரடியாக அரிசி ஆலைக்கு விற்றுத் தரப்பட்டது. கிலோ ஒன்றுக்கு 34/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 50,660/- வர்த்தகம் நடைபெற்றது.

11. உவரி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 1089 கிலோ வெள்ளை பொன்னி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு 32/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 34,848/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


12. கொல்லவீரன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் 391 கிலோ பாசிப்பயிறு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு 85/-க்கு அதிகபட்ச விலையாக விலை போனது. இதன் மூலம் ரூபாய் 33,235/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


  
ஆக மொத்தம்  ரூபாய் 11,58,228/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

  

மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளரை  9025152075லும் மேற்பார்வையாளர் சீனிகுருசாமியை 9600802823 லும் சந்தை பகுப்பாளர் நாகஅர்ஜுனை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வாட்ஷப் குழுக்களில் தாங்களே தங்களுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இணைக்கலாம். அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வியாபாரிகள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைய கீழே உள்ள  லிங்க்கினை தொடவும்: https://chat.whatsapp.com/Io2EyhdscYm3SeS0JWc0SZ.

No comments:

Post a Comment

Post Top Ad