மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆய்வு.
மதுரை மாநகராட்சி அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, ம தகவல்
தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், மேயர் இந்திராணி
பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் பங்கேற்றனர். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, ஆய்வு மேற்கொண்டார்.
தெற்கு சித்திரை வீதியில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள
பொது கழிப்பறையை ஆய்வு மேற்கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறும், கீழசித்திரை வீதி மீனாட்சி பூங்காவை முறையாக பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார். தளவாய் தெருவில் மழைநீர் வாய்க்காலில் மழைநீர் சீராக செல்வதற்கு குறித்தும், தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி மற்றும் பாதாள பைரவர் கோவில் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மேற்
கொள்ளப்பட்டு வரும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ,வார்டு எண்.50 காமாட்சியம்மன் கோவில் தெருவில் ரூ.4.60 மதிப்பீட்டில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பொது கழிப்பறையும் மற்றும் வார்டு எண்.50 காமாட்சிபுரம் அக்ரஹாரத்தில் புதிய ஆழ்துளை கிணறு சின்டெக்ஸ் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து
வைத்தார்கள்.
இந்த ஆய்வில் ,மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, உதவி ஆணையாளர் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, உதவிப் பொறியாளர் ஆறுமுகம். சுகாதார ஆய்வாளர் ரமேஷ், மாமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், இந்திராகாந்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment