திருமங்கலம் அருகே மாநில அளவிலான யோகா போட்டி - 300-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் பங்கேற்பு - 5 வயது முதல் 15 வயது உடையோர் உடலை ரப்பர் போல் வளைத்து தங்களது திறனை வெளிப்படுத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் மாநில அளவிலான யோகா போட்டி, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சர்வீஸ் நடைபெற்றது. இப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது உடல் திறனை வெளிப்படுத்தினர்.
சென்னை, மதுரை , விருதுநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர்,நாமக்கல் ,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஐந்து வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவியர் யோகாசனத்தில் உள்ள பல்வேறு கலைகளை தங்களது உடலின் மூலம் ரப்பர் வளைத்து காண்பூரை மெய்சிலிர்க்கும் வண்ணம் யோகா கலையை செய்து வெளிப்படுத்தினர்.
இந்த யோகா போட்டியில் சாம்பியன்ஷிப் முதல் பரிசை கன்னியாகுமரி மாவட்டம் ஜே எஸ் ஜே அகாடமி மாணவி லக்சா சந்துரு முதல் பரிசையும், விருதுநகர் மாவட்டம் சத்திரிய வித்யசாலா பள்ளி 6-ம் வகுப்பு மாணவி வர்ஷினி இரண்டாவது பரிசையும் தட்டி சென்றனர்.
மேலும், சிறந்தமுறையில் பல்வேறு ஆசனங்களை செய்த பத்துக்கும் மேற்பட்டோரை சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment