சோழவந்தான் பசும்பொன் நகரில் சேரும் சகதியுமான சாலையை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 9 November 2024

சோழவந்தான் பசும்பொன் நகரில் சேரும் சகதியுமான சாலையை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை.

 


சோழவந்தான் பசும்பொன் நகரில் சேரும் சகதியுமான சாலையை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கோரிக்கை.


மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் ஆசிரியர் காலனி வீதியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக சேரும் சகதியுமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு உள்ளதால் உடனடியாக இதை சரி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செயல் அலுவலர் ஆகியோர்களுக்கு அதிமுக வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார் இது குறித்து அவர் கூறுகையில் சோழவந்தான் பேரூராட்சியில் எனது 3வது வார்டு  பகுதியான பசும்பொன் நகர் ஆசிரியர் காலனி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தெருக்களில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வலியுறுத்தினேன் இதுவரை எடுக்கவில்லை ஆகையால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக இந்த பகுதியில் சாலையை சீரமைத்து பொதுமக்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad