மது போதையில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த வாலிபர் ரயில் மோதி தலைத் துண்டிக்கப்பட்டு உயிரிழப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 9 November 2024

மது போதையில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த வாலிபர் ரயில் மோதி தலைத் துண்டிக்கப்பட்டு உயிரிழப்பு

 


சமயநல்லூர் அருகே ரயில்வே தண்டவாளம் அருகே  மது போதையில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த வாலிபர் ரயில் மோதி தலைத் துண்டிக்கப்பட்டு உயிரிழப்பு.



மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுலி நகர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாண்டி(26) அவரது மனைவி அர்ச்சனா(24) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் நான்கு மாதத்திற்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது  சுரேஷ் பாண்டி தார் சாலை அமைக்கும் இயந்திரத்தின் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார் இந்நிலையில் சுரேஷ் பாண்டி தினமும் மது அருந்தி வருவதாக கூறப்படுகிறது


நேற்று மாலை வழக்கம் போல் மதுக்கடையில் மது வாங்கி மதுக்கடைக்கு எதிரே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.


மதுரையில் இருந்து மாலை 3 மணி அளவில் சென்னைக்கு செல்லும் தேஜஸ் ரயிலில் தேனூர் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு எதிரே உள்ள தண்டவாளத்தில் மது அருந்திய நிலையில் மதுபோதை தலைக்கேறி நிலை தடுமாறி தண்டவாளத்தில் படுத்ததாக  கூறப்படுகிறது.


இதனால் அதிவேகமாக வந்த ரயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் பாண்டி உயிரிழந்தார்.


தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் சமயநல்லூர் காவல்துறையினர் சுரேஷ் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல் துறையினர் சுரேஷ் பாண்டி விபத்தில் இறந்தாரா அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற  கோணத்தில்  விசாரணை செய்து வருகின்றனர்.


பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் மதுபோதையில் ரயில் விபத்தில் தந்தை இறந்ததால் கட்டப்புலிநகர் கிராம பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad