பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் காலமானார்.
மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல எழுத்தாளரும் ஆன்மீக சொற்பொழிவாளருமான இந்திரா சௌந்தராஜன் இன்று அவரது இல்லத்தில் என்று எதிர்பாராத விதமாக இயற்கை எய்தினார். தொடர்ந்து அவரது உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சிறுகதைகள் நாவல்கள் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதி வரும் இவர் புராணங்கள் இதிகாசங்களை கலந்து கதைகளில் எழுதுவதில் வல்லவராக திகழ்ந்துள்ளார். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு தெய்வீக தலையீடு மறுபிறவி பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கு இவர் கதைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன அளவு பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவரது மறைவு குடும்பத்தினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக இந்திரா சௌந்தராஜன் தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த நிலையில் உயிர் பிரிந்தது
No comments:
Post a Comment